2482. எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க,
கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்;
தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர்
விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                      அமர்ந்தாரே.
8
உரை