2483. தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்;
பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால்
ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக்
                                                        கருதும்
வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                    அமர்ந்தாரே.
9
உரை