2502. பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக,
பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய,
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு,
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம்
                                                    அரசிலியே.
6
உரை