2533. வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்
                                                         பொழில்
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்!
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ
எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி
                                                       அல்லையே?
6
உரை