2536. களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய்,
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்;
துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி,
உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே.
9
உரை