2558. ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே.
9
உரை