2562. விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை,
                                                       மத்தமும்,
இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை
                                                       போய்,
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர்
                                                       என்பதே.
2
உரை