2570. பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம்
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன்,
                                                       மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.
10
உரை