2577. ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ் உலகங்கள்
                                                      அவை மூட,
"ஆழி, எந்தை!" என்று அமரர்கள் சரண்புக, அந்தரத்து
                                                  உயர்ந்தார் தாம்,
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன்,
                                                  எம்பெருமானார்,
வாழி மா நகர்ச்சிரபுரம் தொழுது எழ, வல்வினை
                                                     அடையாவே.
6
உரை