2581. பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத்
                                                   துவர் தோய்ந்த
செறித்த சீவரத் தேரரும், தேர்கிலாத் தேவர்கள்
                                                     பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட, இள
                                                         வாளை
வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ, வினை விட்டிடும்,
                                                    மிகத் தானே.
10
உரை