2603. |
குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும்,
குறியினில் நெறி
நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு, அவை மெய் எனக்
கொள்ளன் மின்! விடம் உண்ட
கண்டர், முண்டம் நல் மேனியர், கடிக்குளத்து உறைதரும்
எம் ஈசர்,
தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள்! தூ
நெறி எளிது ஆமே. |
10 |