2609. துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை, வடம் அணி
                                                       சிரமாலை,
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு
                                                      கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை,
                                                   நினைவோடும்
சென்று உலாவி நின்று, ஏத்த வல்லார் வினை தேய்வது
                                                   திணம் ஆமே.
5
உரை