2612. மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும்,
                                                     அரக்கன்தன்
தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு
                                                      கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை
                                                        போமே.
8
உரை