2613. மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு
                                                       ஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை,
                                                      பரிவோடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள்
                                                       நணுகாவே.
9
உரை