2623. குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல
                                               வரைப் பரப்பு ஆய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள்
                                                 இருபதும் ஊன்றி,
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி
                                                     எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.
8
உரை