2652. |
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும்
அன்பர்
ஆம் அடியார்கள்
பருகும் ஆர் அமுது! என நின்று, பரிவொடு பத்தி செய்து,
"எத்திசையும்
குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே!" என்று
எழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய்; அவன்
அருள் பெறல் ஆமே. |
5 |