2667. நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை
                                                         நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்
                                                      நலியானே.
9
உரை