2694. கூர்வு இலங்கும் திருசூலவேலர், குழைக் காதினர்,
மார்வு இலங்கும் புரிநூல் உகந்த(ம்) மணவாளன், ஊர்
நேர் விலங்கல்(ல்) அன திரைகள் மோத(ந்), நெடுந்
                                                     தாரைவாய்க்
கார் விலங்கல்(ல்) எனக் கலந்து ஒழுகும் கடல் காழியே.
3
உரை