2773. விடம் முன் ஆர் அவ் அழல் வாயது ஓர் பாம்பு அரை
                                                       வீக்கியே.
நடம் முன் ஆர் அவ் அழல் ஆடுவர், பேயொடு நள்
                                                         இருள
வட மன் நீடு புகழ்ப் பூழியன், தென்னவன், கோழிமன்,
அடல் மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
                                                      அச்சமே!
5
உரை