தொடக்கம் |
2.2 திருவலஞ்சுழி - வினாஉரை - இந்தளம்
|
|
|
1480. |
விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன்
விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே? |
1 |
|
உரை
|
|
|
|
|
1481. |
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே? |
2 |
|
உரை
|
|
|
|
|
1482. |
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத்
தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே? |
3 |
|
உரை
|
|
|
|
|
1483. |
கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே? |
4 |
|
உரை
|
|
|
|
|
1484. |
கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி
கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே? |
5 |
|
உரை
|
|
|
|
|
1485. |
பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில்
பல்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே? |
6 |
|
உரை
|
|
|
|
|
1486. |
கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும்
தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே? |
7 |
|
உரை
|
|
|
|
|
1487. |
தேன் உற்ற நறுமாமலர்ச்
சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே? |
8 |
|
உரை
|
|
|
|
|
1488. |
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில்
பல்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே? |
9 |
|
உரை
|
|
|
|
|
1489. |
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது
இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே? |
10 |
|
உரை
|
|
|
|
|
1490. |
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே. |
11 |
|
உரை
|
|
|
|