2.11 சீகாழி - இந்தளம்
 
1580. நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.
1
உரை
   
1581. நம் மானம் மாற்றி நமக்கு அருள் ஆய் நின்ற
பெம்மானை, பேய் உடன் ஆடல் புரிந்தானை,
அம்மானை, அந்தணர் சேரும் அணி காழி
எம்மானை, ஏத்த வல்லார்க்கு இடை இல்லையே.
2
உரை
   
1582. அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!
3
உரை
   
1583. புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர் கோயில்
பற்றானை, பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
4
உரை
   
1584. நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர்தாம் வியந்து ஏத்திய
கதியானை, கார் உலவும் பொழில் காழி ஆம்
பதியானை, பாடுமின், நும் வினை பாறவே!
5
உரை
   
1585. செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம்
ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி
மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.
6
உரை
   
1586. துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய
நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.
7
உரை
   
1587. குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால் தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள
நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!
8
உரை
   
1588. சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல் அவை கேட்டு வெகுளேன்மின்!
பூ ஆயகொன்றையினானைப் புனல் காழிக்
கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே!
9
உரை
   
1589. கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.
11
உரை