தொடக்கம் |
2.17 திருவேணுபுரம் - இந்தளம்
|
|
|
1645. |
நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1646. |
அரவு ஆர் கரவன், அமை ஆர் திரள்தோள
குரவு ஆர் குழலாள் ஒருகூறன், இடம்
கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு
விரவு ஆக வல்லார் வேணுபுரமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1647. |
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1648. |
காசு அக் கடலில் விடம் உண்ட கண்டத்து
ஈசர்க்கு இடம் ஆவது இன்நறவ
வாசக்கமலத்து அனம், வன் திரைகள்
வீச, துயிலும் வேணுபுரமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1649. |
அரை ஆர் கலை சேர் அனமென்னடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம்
நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை
விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1650. |
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
தளிரும் சடைமேல் உடையான் இடம் ஆம்
நளிரும் புனலில் நல செங்கயல் கண்
மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1651. |
ஏவும் படை வேந்தன் இராவணனை,
"ஆ" என்று அலற, அடர்த்தான் இடம் ஆம்
தாவும் மறிமானொடு தண்மதியம்
மேவும் பொழில் சூழ் வேணுபுரமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1652. |
கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1653. |
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
ஆகம் அறியா அடியார் இறைஊர்
மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல்
மீ கம் அறிவார், வேணுபுரமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1654. |
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே. |
11 |
|
உரை
|
|
|
|