தொடக்கம் |
2.25 திருப்புகலி - இந்தளம்
|
|
|
1731. |
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே! |
1 |
|
உரை
|
|
|
|
|
1732. |
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கண்ணியார், கமழ் கொன்றை சேர் முடிப்
புண்ணியன், உறையும் புகலியை
நண்ணுமின், நலம் ஆன வேண்டிலே! |
2 |
|
உரை
|
|
|
|
|
1733. |
வீசும் மின் புரை காதல் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்,
பூசும் நீற்றினன், பூம் புகலியைப்
பேசுமின், பெரிது இன்பம் ஆகவே! |
3 |
|
உரை
|
|
|
|
|
1734. |
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,
பொடி கொள் மேனியன், பூம் புகலியுள
அடிகளை அடைந்து அன்பு செய்யுமே! |
4 |
|
உரை
|
|
|
|
|
1735. |
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,
ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்
பூதத்தான், புகலிநகர் தொழ,
ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1736. |
மறையினான் ஒலி மல்கு வீணையன்,
நிறையின் ஆர் நிமிர்புன்சடையன், எம்
பொறையினான், உறையும் புகலியை
நிறையினால் தொழ, நேசம் ஆகுமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1737. |
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்,
இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,
பொரு விடை உயர்த்தான், புகலியைப்
பரவிட, பயில் பாவம் பாறுமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1738. |
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
விருப்பினான் அரக்கன் உரம் செகும்
பொருப்பினான், பொழில் ஆர் புகலிஊர்
இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே! |
8 |
|
உரை
|
|
|
|
|
1739. |
மாலும், நான்முகன்தானும், வார் கழல்
சீலமும் முடி தேட, நீண்டு எரி
போலும் மேனியன் பூம் புகலியுள
பாலது ஆடிய பண்பன் அல்லனே? |
9 |
|
உரை
|
|
|
|
|
1740. |
நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல்
ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்
நின்றவன் நிகழும் புகலியைச்
சென்று கைதொழ, செல்வம் ஆகுமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1741. |
புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே. |
11 |
|
உரை
|
|
|
|