தொடக்கம் |
2.28 திருக்கருவூர் ஆனிலை - இந்தளம்
|
|
|
1764. |
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1765. |
நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1766. |
விண் உலாம் மதி சூடி, வேதமே
பண் உளார், பரம் ஆய பண்பினர்,
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார், அடியார்க்கு நல்லரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1767. |
முடியர், மும்மதயானை ஈருரி;
பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர்
கடிஉளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள், யாவையும் ஆய ஈசரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1768. |
பங்கயம் மலர்ப்பாதர், பாதி ஓர்
மங்கையர், மணிநீலகண்டர், வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை,
அம் கை ஆடுஅரவத்து எம் அண்ணலே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1769. |
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே! |
6 |
|
உரை
|
|
|
|
|
1770. |
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப்
பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர்,
கண்ணினார், கருவூருள் ஆன்நிலை
நண்ணினார், நமை ஆளும் நாதரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1771. |
கடுத்த வாள் அரக்கன், கயிலையை
எடுத்தவன், தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை,
கொடுத்தவன், அருள்; கூத்தன் அல்லனே! |
8 |
|
உரை
|
|
|
|
|
1772. |
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால்,
தொழுது மா மலரோனும், காண்கிலார்
கழுதினான், கருவூருள் ஆன்நிலை
முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1773. |
புத்தர் புன் சமண் ஆதர், பொய் உரைப்
பித்தர், பேசிய பேச்சை விட்டு, மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே! |
10 |
|
உரை
|
|
|
|
|
1774. |
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே. |
11 |
|
உரை
|
|
|
|