தொடக்கம் |
2.29 திருப்புகலி திருவிராகம் - இந்தளம்
|
|
|
1775. |
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1776. |
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1777. |
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1778. |
மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1779. |
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1780. |
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1781. |
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1782. |
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1783 |
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1784. |
கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1785. |
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே. |
11 |
|
உரை
|
|
|
|