தொடக்கம் |
2.32 திருஐயாறு - திருவிராகம் - இந்தளம்
|
|
|
1808. |
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1809. |
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு
ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார,
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1810. |
கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1811. |
நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு,
அன்று,
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1812. |
வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க,
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1813. |
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1814. |
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
"என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1815. |
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி
வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1816. |
பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர்
பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1817. |
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர்,
புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1818. |
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு
ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே. |
11 |
|
உரை
|
|
|
|