தொடக்கம் |
2.35 திருத் தென்குரங்காடுதுறை - இந்தளம்
|
|
|
1841. |
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1842. |
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1843. |
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1844. |
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1845. |
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1846. |
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி,
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1847. |
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1848. |
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1849. |
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1850. |
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1851. |
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே. |
11 |
|
உரை
|
|
|
|