2.36 திருஇரும்பூனை - வினா உரை - இந்தளம்
 
1852. சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?
1
உரை
   
1853. தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி,
எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே?
2
உரை
   
1854. அன்பால் அடி கைதொழுவீர்! அறிவீரே
மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி,
இன்புஆய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
பொன் போல் சடையில் புனல் வைத்த பொரு
3
உரை
   
1855. நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர்
கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி,
இச்சித்து, இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?
4
உரை
   
1856. சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர்
நல் தாழ்குழல் நங்கையொடும் உடன் ஆகி,
எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
புற்று ஆடு அரவோடு பூண்ட பொரு
5
உரை
   
1857. தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர்
சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி,
ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
6
உரை
   
1858. ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர்! இது சொல்லீர்
பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்
இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியஆறே?
8
உரை
   
1859. துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன் ஆகி,
இயல்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே?
9
உரை
   
1860. துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர்
பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி,
இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே?
10
உரை
   
1861. எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.
11
உரை