தொடக்கம் |
2.41 திருச்சாய்க்காடு - சீகாமரம்
|
|
|
1906. |
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்;
பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1907. |
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும்,
பூம் புகார்ச்
சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும்,
வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1908. |
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்!
ஆர் அறிவார்,
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப,
நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1909. |
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின்
பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும்
தாழ்பொழில்வாய்,
மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும்
காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே! |
4 |
|
உரை
|
|
|
|
|
1910. |
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
கொடியிடையைப்
பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல்
பால்மதியம்
தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ்
ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1911. |
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான்,
காமனை
முன்
தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான்,
திருமுடிமேல்
ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1912. |
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும்
நெடுவீதி,
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும்
அலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்
அலவே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1913. |
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும்
எரியுண்ண,
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு
அரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர்
இலையே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1914. |
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும்
நான்முகனும்,
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை;
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1915. |
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு
உலோவிப்
போய்
அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று
அடைமின்,
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே! |
10 |
|
உரை
|
|
|
|
|
1916. |
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர்
மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
"எம் பந்தம்" எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே. |
11 |
|
உரை
|
|
|
|