தொடக்கம் |
2.45 திருக்கைச்சினம் - சீகாமரம்
|
|
|
1950. |
தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர்
செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1951. |
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர்
கூறு
உடையான்,
படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான்,
நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான்,
கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1952. |
பாடல் ஆர் நால்மறையான்; பைங்கொன்றை
பாம்பினொடும்
சூடலான், வெண்மதியும் துன்று கரந்தையொடும்;
ஆடலான் அங்கை அனல் ஏந்தி; ஆடு அரவக்
காடலன்; மேவி உறை கோயில் கைச்சினாமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1953. |
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான்' என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த,
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து
அவியக்
கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1954. |
தேய்ந்து மலி வெண்பிறையான், செய்யதிருமேனியினான்,
வாய்ந்து இலங்கு வெண்நீற்றான், மாதினை ஓர் கூறு
உடையான்,
சாய்ந்து அமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சு உண்டு
அநங்கைக்
காய்ந்த பிரான், மேவி உறை கோயில் கைச்சினமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1955. |
மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை
பயின்றான்,
அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு
உகந்தான்,
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல்
கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1956. |
வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில்
ஆக.
எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்.
பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1957. |
போது உலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்;
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து, நின்று ஆடும்
காதலினான்; மேவி உறை கோயில் கைச்சினாமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1958. |
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும்,
எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்;
பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல்
கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1959. |
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்,
விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே. |
11 |
|
உரை
|
|
|
|