தொடக்கம் |
2.48 திருவெண்காடு - சீகாமரம்
|
|
|
1982. |
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும்
கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1983. |
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு
உள்ளம்
நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள
நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம்,
தீவினையே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1984. |
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம்,
மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம்
பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா
விரும்பினனே.
|
3 |
|
உரை
|
|
|
|
|
1985. |
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்
தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1986. |
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன்
தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1987. |
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான்,
சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும்
வெண்காடே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1988. |
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப்
பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம்
பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை
துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை
இறையவனே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1989. |
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த
மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான்
உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும்
வெண்காடே.
|
8 |
|
உரை
|
|
|
|
|
1990. |
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான்,
என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும்,
உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்
என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1991. |
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி
பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்! அறிவு உடையீர்! இது
கேண்மின்;
"வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்"
என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே! |
10 |
|
உரை
|
|
|
|
|
1992. |
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்
ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை
வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை
வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப்
புகுவாரே. |
11 |
|
உரை
|
|
|
|