தொடக்கம் |
2.49 சீகாழி - சீகாமரம்
|
|
|
1993. |
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர்
பாடி ஆடிய
ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, "எம்பெருமான்!" என்று என்று
உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1994. |
மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி
மீது ஏறி
சங்கம்
வங்கமும்
கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழி,
வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய
மாந்தர்தம்
வினை
விண்டல் அங்கு எளிது ஆம்; அது நல்விதி ஆமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1995. |
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும்
ஏத்தி வணங்கு
வார்
பொழில்
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி,
"தோடு உலாவிய காது உளாய்! சுரிசங்க வெண்குழையாய்!"
என்று
என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1996. |
மையின் ஆர் பொழில் சூழ, நீழலில் வாசம்
ஆர் மது மல்க,
நாள்தொறும்
கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி,
"ஐயனே! அரனே!" என்று ஆதரித்து ஓதி, நீதி உளே நினைபவர்,
உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1997. |
மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர்
வந்து வந்து ஒளிர்
நித்திலம்
விழ,
கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி,
வலிய காலனை வீட்டி மாணிதன் இன் உயிர் அளித்தானை
வாழ்த்திட,
மெலியும், தீவினை நோய் அவை; மேவுவர், வீடே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1998. |
மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான்
உளோர்களும்
வந்து, வைகலும்,
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழி,
நெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை
பாடுவார், "வினை
செற்ற மாந்தர்" எனத் தெளிமின்கள், சிந்தையுளே |
6 |
|
உரை
|
|
|
|
|
1999. |
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம்
தொழ,
பயில்
கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி,
"ஊனுள் ஆர் உயிர் வாழ்க்கையாய்! உறவு ஆகி நின்ற
ஒருவனே!"
என்று என்று
ஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2000. |
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி
சேர் வயல்,
ஆர,
வைகலும்
கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழி
அத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்!
உன
கழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே! |
8 |
|
உரை
|
|
|
|
|
2001. |
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி
உண்ண,
மந்திகள்
கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,
"திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர்ச்
செல்வன்
ஆகிய
இருவர் காண்பு அரியான்" என ஏத்துதல் இன்பமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2002. |
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது
வண் துகில்
ஆடை
போர்த்தவர்,
கண்டு சேரகிலார்; அழகு ஆர் கலிக் காழி,
"தொண்டைவாய் உமையோடும் கூடிய வேடனே சுடலைப்
பொடி
அணி!
அண்டவாணன்!" என்பார்க்கு அடையா, அல்லல் தானே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2003. |
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர்
பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ்
உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே. |
11 |
|
உரை
|
|
|
|