2.51 திருக்களர் - சீகாமரம்
 
2015. நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
                                                    ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
                                                  செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!
1
உரை
   
2016. தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி                                                    போற்ற, மிண்டிய,
தாளினார் வளரும் தவம் மல்கு திருக்களருள
வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா! விரும்பும்                                                   அடியாரை
ஆள் உகந்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!
2
உரை
   
2017. பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு                                                  போற்றி செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாடத் திருக்களருள
நீட வல்ல நிமலனே! அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க                                                             மாநடம்
ஆட வல்லவனே! அடைந்தார்க்கு அருளாயே!
3
உரை
   
2018. அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர் பயில்                                                   மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய                                                   திருக்களருள
என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா! இணை அடி                                        போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே! அடைந்தார்க்கு அருளாயே!
4
உரை
   
2019. கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம் கெண்டி மா                                                  மது உண்டு இசை செய,
தெங்கு பைங்கமுகம் புடை சூழ்ந்த திருக்களருள
மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே! பிணை கொண்டு,                                                  ஓர் கைத்தலத்து,
அம் கையில் படையாய்! அடைந்தார்க்கு அருளாயே!
5
உரை
   
2020. கோல மா மயில் ஆலக் கொண்டல்கள் சேர் பொழில்                                           குலவும் வயல் இடைச்
சேல், இளங் கயல், ஆர் புனல் சூழ்ந்த திருக்களருள
நீலம் மேவிய கண்டனே! நிமிர்புன்சடைப் பெருமான்                                                எனப் பொலி
ஆல நீழல் உளாய்! அடைந்தார்க்கு அருளாயே!
6
உரை
   
2021. தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால்                                                     அழல் எழத்
திண்பலம் கெடுத்தாய்! திகழ்கின்ற திருக்களருள
வம்பு அலர் மலர் தூவி, நின் அடி வானவர் தொழ, கூத்து                                                     உகந்து பே
ரம்பலத்து உறைவாய்! அடைந்தார்க்கு அருளாயே!
7
உரை
   
2022. குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி, மாடம் நீடு உயர்                                                     கோபுரங்கள் மேல்
சென்று அடுத்து, உயர் வான்மதி தோயும் திருக்களருள
நின்று அடுத்து உயர்மால்வரை திரள்தோளினால் எடுத்தான்                                                  தன் நீள் முடி
அன்று அடர்த்து உகந்தாய்! அடைந்தார்க்கு அருளாயே!
8
உரை
   
2023. பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு                                                     ஆர வாழ் பதி,
தெண் நிலாமதியம் பொழில் சேரும் திருக்களருள
உள் நிலாவிய ஒருவனே! இருவர்க்கு நின் கழல் காட்சி                                                     ஆர் அழல்
அண்ணல் ஆய எம்மான்! அடைந்தார்க்கு அருளாயே!
9
உரை
   
2024. பாக்கியம்பல செய்த பத்தர்கள், பாட்டொடும் பலபணிகள்                                                           பேணிய
தீக்கு இயல் குணத்தார், சிறந்து ஆரும் திருக்களருள
வாக்கினால் மறை ஓதினாய்! அமண்தேரர் சொல்லிய                                           சொற்கள் ஆன பொய்
ஆக்கி நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!
10
உரை
   
2025. இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்)                                                 நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம்                                               பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.
11
உரை