தொடக்கம் |
2.54 திருப்புகலி - காந்தாரம்
|
|
|
2048. |
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்!
அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.
|
1 |
|
உரை
|
|
|
|
|
2049. |
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர்
கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2050. |
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடைமேல்
அடைவு எய்த,
மொழி மல்கு மாமறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!
பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,
எழில் மல்கு கோயிலே கோயில் ஆக இருந்தீரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2051. |
கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்!
கடிய கரியின்தோல்,
மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்!
பயில் ஆர்ந்த வேதியர்கள் பதி ஆய் விளங்கும் பைம்புகலி,
எயில் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக இசைந்தீரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2052. |
நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு
ஆர்த்தீர்!
பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும்
பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி,
தே ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2053. |
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
என்னும்
பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!
விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன்புகலி,
கண் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2054. |
களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரியக்
கணை தொட்டீர்!
அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த, அருள் செய்தீர்!
தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி,
ஒளி புல்கு கோயிலே கோயில் ஆக உகந்தீரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2055 |
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர் கோனை
வரைக்கீழ் இட்டு
உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்
புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,
வரம் தோன்று கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2056. |
சலம் தாங்கு தாமரை மேல் அயனும், தரணி
அளந்தானும்,
கலந்து ஓங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்!
புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி,
நலம் தாங்கு கோயிலே கோயில் ஆக நயந்தீரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2057. |
நெடிது ஆய வன் சமணும், நிறைவு ஒன்று இல்லாச்
சாக்கியரும்,
கடிது ஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள் ஆனீர்!
பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து
ஏத்த,
வடிவு ஆரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2058. |
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே. |
11 |
|
உரை
|
|
|
|