தொடக்கம் |
2.55 திருத் தலைச்சங்காடு - காந்தாரம்
|
|
|
2059. |
நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து,
ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில்
ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2060. |
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித்
தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2061. |
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள்
ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2062. |
வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட
வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2063. |
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு
ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2064. |
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி
நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2065. |
அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து,
ஓர் அனல் ஏந்தி,
கொடி புல்கு மென்சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்!
பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச்சங்கை,
கடி புல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2066. |
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2067. |
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2068. |
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர்
சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே. |
10
|
|
உரை
|
|
|
|
|
2069. |
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே. |
11 |
|
உரை
|
|
|
|