தொடக்கம் |
2.63 திருஅரிசிற்கரைப் புத்தூர் - காந்தாரம்
|
|
|
2146. |
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2147. |
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,
ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும்,
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2148. |
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும்
பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2149. |
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2150. |
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில்
ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2151. |
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான்
தோயும்
வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2152. |
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின்
நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2153. |
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று
ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2154. |
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு
அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2155. |
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
"பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா!" என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2156. |
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே. |
11 |
|
உரை
|
|
|
|