தொடக்கம் |
2.64 திருமுதுகுன்றம் - காந்தாரம்
|
|
|
2157 |
`தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
பெரியோனே!
"ஆவா!" என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்!' என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2158. |
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு,
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2159. |
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த,
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2160. |
தெரிந்த அடியார், "சிவனே!" என்று திசைதோறும்,
குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி,
இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர்,
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2161. |
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித்
தம்
சித்தம் நைந்து, "சிவனே!" என்பார் சிந்தையார்;
கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2162. |
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர்,
தூவி,
"நம்பா!" என்ன, நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2163. |
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ்
வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த,
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2164. |
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்,
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட,
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2165.
|
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே நின்று
உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி
முருகின் பணைமேல் இருந்து நடம் செய் முதுகுன்றே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2166. |
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே. |
11 |
|
உரை
|
|
|
|