2.65 திருப்பிரமபுரம் - காந்தாரம்
 
2167. கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
                                                        போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர்                                                           போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
1
உரை
   
2168. கூர் அம்பு அது இலர்போலும்; கொக்கின் இறகு இலர்
                                                       போலும்;
ஆரமும் பூண்டிலர் போலும்; ஆமை அணிந்திலர்
                                                       போலும்;
தாரும் சடைக்கு இலர்போலும்; சண்டிக்கு                                          அருளிலர்போலும்;
பேரும் பல இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
2
உரை
   
2169. சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்;
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்;
பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
3
உரை
   
2170. நச்சு அரவு ஆட்டிலர் போலும்; நஞ்சம் மிடற்று
                                                இலர்போலும்;
கச்சுத் தரித்திலர்போலும்; கங்கை தரித்திலர்போலும்;
மொய்ச்ச வன்பேய் இலர்போலும்; முப்புரம்                                            எய்திலர்போலும்;
பிச்சை இரந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
4
உரை
   
2171. தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்;
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்;
ஓடு கரத்து இலர்போலும்; ஒள் அழல் கை இலர்போலும்
பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.
5
உரை
   
2172. விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்;
அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்;
வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம்
                                                         அமர்ந்தாரே.
6
உரை
   
2173. பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
                                         அருளிலர்போலும்;
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்;
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.
7
உரை
   
2174. பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர் போலும்;
அரசன் இலங்கையர் கோனை அன்றும்
                                              அடர்த்திலர்போலும்;
புரை செய் புனத்து இளமானும், புலியின் அதள்,
                                                    இலர்போலும்
பிரசமலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே.
8
உரை
   
2175. அடி முடி மால் அயன் தேட, அன்றும் அளப்பிலர்போலும்;
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர்போலும்;
படி மலர்ப்பாலனுக்கு ஆகப் பாற்கடல் ஈந்திலர்போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.
9
உரை
   
2176. வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட
                                              நின்றிலர்போலும்;
அற்றவர், ஆல்நிழல், நால்வர்க்கு அறங்கள்
                                               உரைத்திலர்போலும்;
உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்;
பெற்றமும் ஊர்ந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.
10
உரை
   
2177. பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.
11
உரை