தொடக்கம் |
2.68 திருக்கடம்பூர் - காந்தாரம்
|
|
|
2200. |
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார்
சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2201. |
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2202. |
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல்
இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2203. |
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர்
நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2204. |
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு,
இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2205. |
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல்
அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2206. |
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல்
அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள் |
7 |
|
உரை
|
|
|
|
|
2207. |
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
"மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்!" என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2208. |
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா
மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2209. |
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும்,
அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2210. |
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே. |
11 |
|
உரை
|
|
|
|