தொடக்கம் |
2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று - காந்தாரம்
|
|
|
2222. |
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2223. |
வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
ஊரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2224. |
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம்,
காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2225. |
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை,
வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2226. |
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு,
துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2227. |
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர்,
சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2228. |
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம்,
சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2229. |
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை,
மிகு புகலி, காழி,
நறவம் மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன்
தன் ஊர்,
விறல் ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல்
அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம்
சேரும் ஊரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2230. |
சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு,
நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2231. |
செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம்,
சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை,
ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு
நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2232. |
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு,
புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே. |
11 |
|
உரை
|
|
|
|
|
2233. |
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின்
பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே. |
12 |
|
உரை
|
|
|
|