2.75 சீகாழி - காந்தாரம்
 
2280. விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.
1
உரை
   
2281. வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.
2
உரை
   
2282. சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன்
                                                     வெண்தலைத்
துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள
மல் தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!
3
உரை
   
2283. பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடை
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்
கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள
தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர் வண்ணனே.
4
உரை
   
2284. தூ நயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்,
நா நயம் கொள் மறை ஓதி, மாது ஒருபாகமா,
கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள
தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே.
5
உரை
   
2285. சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே,
மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன்
கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள
பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.
6
உரை
   
2286. முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,
வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,
கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள
கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடி கொண்டதே!
7
உரை
   
2287. வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள
கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு
நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,
தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே.
8
உரை
   
2288. மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும்
இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர்
வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை
கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.
9
உரை
   
2289. நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர்,
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான்
கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள
வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.
10
உரை
   
2290. கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
                                                      சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.
11
உரை