தொடக்கம் |
2.77 திருஅறையணி நல்லூர் - காந்தாரம்
|
|
|
2302. |
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்
தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால்
தொழுவார்களே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2303. |
இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே,
இமையோர்
தொழ,
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில்
எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறையணி
நல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2304. |
என்பினார், கனல் சூலத்தார், இலங்கும்
மா மதி
உச்சியான்,
பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பு இலி
என்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன்
தாள்களுக்கு
அன்பினார் அறையணி நல்லூர் அம் கையால்
தொழுவார்கே |
3 |
|
உரை
|
|
|
|
|
2305. |
விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப்
பூசிய வேதியன்,
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது
அன்றியும்,
அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணி
நல்லூர்
பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2306. |
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர்தாம்
தொழும் தேவன்
நீ
ஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்!
அறையணி நல்லூர்,
மேயினார் தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்
பாயினாய்! அதிர் கழலினாய்! பரமனே! அடி பணிவனே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2307. |
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும்
வீக்கிய
அரையினார், அறையணி நல்லூர் அண்ணலார், அழகு
ஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், நறும்போது
சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்கே |
6 |
|
உரை
|
|
|
|
|
2308. |
வீரம் ஆகிய வேதியர்; வேக மா களியானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம்
இறை;
ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணி
நல்லூர்
வாரம் ஆய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை
மாயுமே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2309. |
தக்கனார் பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன்,
தாழ்சடை
முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணி
நல்லூர்
நக்கனார் அவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம்,
நாங்கே |
8 |
|
உரை
|
|
|
|
|
2310. |
வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப்
பிறர் பின்
செலார்;
செய்வதே அலங்காரம் ஆம்; இவை இவை தேறி இன்பு
உறில்,
ஐயம் ஏற்று உணும் தொழிலர் ஆம் அண்ணலார்,
அறையணி நல்லூர்ச்
சைவனார் அவர், சார்வு அலால், யாதும் சார்வு இலோம்,
நாங்கே |
9 |
|
உரை
|
|
|
|
|
2311. |
வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா
வகை
செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்)! அரணம்
பொடி
ஆக்கிய(ம்) மழுவாள் படை அண்ணலார் அறையணி
நல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும் ஆம், செய்த
பாவமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2312. |
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர்
தொல்
பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின்
ஆர்
மொழியினால், அறையணி நல்லூர் முக்கண் மூர்த்திதன்
தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி
பெறுவரே. |
11 |
|
உரை
|
|
|
|