தொடக்கம் |
2.78 திருவிளநகர் - காந்தாரம்
|
|
|
2313.
|
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2314. |
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது
ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர் " துயர் கெடுக!" என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2315. |
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய
வம்பின்
வேய்த்
தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல் கடல் நஞ்சு
உண்ட
காளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,
மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது விளநகர் அதே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2316. |
கால் விளங்கு எரி கழலினார், கை விளங்கிய
வேலினார்,
நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்)
இலார்,
மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்,
மேல் விளங்கு வெண்பிறையினார்; மேயது விளநகர் அதே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2317. |
மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப்
பழங்காவிரித்
துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;
சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்
சேர்த்தினார்;
மின்னு பொன் புரிநூலினார்; மேயது விள நகர் அதே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2318. |
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல்
உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2319. |
சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும்
சடைமுடியினார்,
கல் தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்,
மல் தரும் திரள் தோளினார், மாசு இல் வெண்பொடிப்
பூசினார்,
வில் தரும் மணிமிடறினார், மேயது விள நகர் அதே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2320. |
படர் தரும் சடை முடியினார், பைங்கழல்
அடி பரவுவார்
அடர் தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு
அரையினார்,
விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,
மிடல் தரும் படைமழுவினார், மேயது விளநகர் அதே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2321. |
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி
காலினார்,
பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்,
மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2322. |
உள்ளதன் தனைக் காண்பன், கீழ் என்ற
மா
மணிவண்ணனும்,
"உள்ளதன் தனைக் காண்பன், மேல்" என்ற மா மலர்
அண்ணலும்,
உள்ளதன் தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும்
சடைமுடியின்மேல்
உள்ளதன் தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2323. |
மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த்
துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே |
11 |
|
உரை
|
|
|
|