தொடக்கம் |
2.79 திருஆரூர் - காந்தாரம்
|
|
|
2324. |
பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு
தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல்,
நெஞ்சே! |
1 |
|
உரை
|
|
|
|
|
2325. |
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்;
தாமும்
போவார்;
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்,
கொண்டு போவார்;
எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை
நெஞ்சே!
அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சே! |
2 |
|
உரை
|
|
|
|
|
2326. |
நிணம், குடர், தோல், நரம்பு, என்பு,
சேர் ஆக்கைதான்
நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு
ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சமே! |
3 |
|
உரை
|
|
|
|
|
2327.. |
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன,
நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
4 |
|
உரை
|
|
|
|
|
2328. |
பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய
இன்பத்
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத்
தூங்கினாயே?
மறவல், நீ! மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த நீர் மல்கு
சென்னி
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
5 |
|
உரை
|
|
|
|
|
2329. |
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின்
வாய்த்
தேரைவாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று
கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும்
முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
6 |
|
உரை
|
|
|
|
|
2330. |
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம்,
ஈச்சோப்பி,
வட்டின்
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு
மயங்கினாயே?
மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம்
வைத்த
ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
7 |
|
உரை
|
|
|
|
|
2331. |
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண்
சுவர் எறிந்து
இது நம் இல்லம்
புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால்
முகடு கொண்டு
முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில்
மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
8 |
|
உரை
|
|
|
|
|
2332. |
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார்,
புத்திரர், தாரம்,
என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப்
பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
9 |
|
உரை
|
|
|
|
|
2333. |
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து,
இன்னம்
நேடிக் காணாப்
படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர்
மலையாள் பாக
வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து
எண்தோள்
அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே! |
10 |
|
உரை
|
|
|
|
|
2334. |
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும்
காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே. |
11 |
|
உரை
|
|
|
|