2.81 திருவேணுபுரம் - காந்தாரம்
 
2346. பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
1
உரை
   
2347. சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம், தோல்
உடை ஆடை அது, கொண்டீர்! உமையாளை ஒருபாகம்
அடையாளம் அது கொண்டீர்! அம் கையினில் பரசு எனும்
படை ஆள்வீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
2
உரை
   
2348. கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்!
திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்!
மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த,
பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
3
உரை
   
2349. நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
                                                         உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.
4
உரை
   
2350. ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு
சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய்
                                                      மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.
5
உரை
   
2351. மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு மகிழ்ந்து
                                                         இருந்தீர்!
துணி மல்கு கோவணத்தீர்! சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர்!
பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச, வேணுபுரத்து
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.
6
உரை
   
2352. நீலம் சேர் மிடற்றினீர்! நீண்ட செஞ்சடையினீர்!
கோலம் சேர் விடையினீர்! கொடுங்காலன் தனைச் செற்றீர்!
ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும்
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.
7
உரை
   
2353. திரை மண்டிச் சங்கு ஏறும் கடல் சூழ் தென் இலங்கையர்
                                                           கோன்
விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர்! வரை தன்னின்
கரை மண்டிப் பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின்
                                                            ஆர்
விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே.
8
உரை
   
2354. தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசை முகன், மால்,
போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற(அ)ரிய திருவடியீர்!
பாய் ஓங்கு மரக் கலங்கள் படு திரையால் மொத்துண்டு,
சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியாத் திகழ்ந்தீரே.
9
உரை
   
2355. நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர், சாக்கியர்கள்
புலை ஆனார் அற உரையைப் போற்றாது, உன் பொன்
                                                          அடியே
நிலை ஆகப் பேணி, "நீ சரண்!" என்றார் தமை, என்றும்
விலை ஆக ஆட்கொண்டு, வேணுபுரம் விரும்பினையே.
10
உரை