தொடக்கம் |
2.89 திருக்கொச்சைவயம் - பியந்தைக்காந்தாரம்
|
|
|
2432. |
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன்
மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2433. |
சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்;
துன்னிய
பூதக்
க(ண்)ணத்தர்; வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர்
கேடு இல்
எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர், மால் எரி
ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2434. |
பாலை அன்ன வெண் நீறு பூசுவர்; பல்சடை
தாழ,
மாலை ஆடுவர்; கீத மா மறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கடல் ஓதம் வெண் திரை கரை மிசை
விளங்கும்
கோல மா மணி சிந்தும் கொச்சை வயம் அமர்ந்தாரே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2435. |
கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு
முடிக்கு
அணிவர்;
பொடிகள் பூசிய மார்பின் புனைவர்; நல் மங்கை ஒர்பங்கர்
கடி கொள் நீடு ஒலி, சங்கின் ஒலியொடு, கலை ஒலி,
துதைந்து,
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2436. |
ஆடல் மா மதி உடையார்; ஆயின பாரிடம்
சூழ,
வாடல் வெண்தலை ஏந்தி, வையகம் இடு பலிக்கு உழல்வார்
ஆடல் மா மடமஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2437. |
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை
தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர்; தொல்வரை வில் அது ஆக,
விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள,
விடைமேல்
கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம்
அமர்ந்தாரே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2438. |
அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2439. |
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால்
என்று இவர்
ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
அமர்ந்தாரே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2440. |
குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது ஒர்
கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல; மை அணி கண்டர்,
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர்,
ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணி மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2441. |
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய
நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே. |
11 |
|
உரை
|
|
|
|