2.91 திருமறைக்காடு - பியந்தைக்காந்தாரம்
 
2453. பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
                                                          முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
                                                            தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.
1
உரை
   
2454. கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை,
ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.
2
உரை
   
2455. நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
                                                  பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
                                                      அமர்ந்தாரே.
3
உரை
   
2456. ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
                                                        கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
                                                  அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
                                                       அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.
4
உரை
   
2457. அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
                                                    மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.
5
உரை
   
2458. பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
                                                      அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
                                                         ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.
6
உரை
   
2459. நாகம் தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும்
                                                             ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
                                                     மறைக்காடே.
7
உரை
   
2460. தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
                                        பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
                                                          நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.
8
உரை
   
2461. விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
                                                  அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
                                                        பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.
9
உரை
   
2462. பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா,
கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!
10
உரை
   
2463. மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
                                                    அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
                                                           போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.
11
உரை