2.96 சீகாழி - பியந்தைக்காந்தாரம்
 
2507. பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
                                                    எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
                                                    உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.
1
உரை
   
2508. தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
"ஆவ!" என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.
2
உரை
   
2509. கரியின் மா முகம் உடைய கணபதி தாதை, பல்பூதம்
திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர், சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி,
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்நகரே.
3
உரை
   
2510. சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம்
துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வான் இடை
                                                        மிடைந்து,
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே.
4
உரை
   
2511. மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி ஏந்திய கையான்,
எங்கள் ஈசன்! என்று எழுவார் இடர்வினை கெடுப்பவற்கு
                                                        ஊர் ஆம்
சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து, தகுதியின் மிக்க
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன்நகரே.
5
உரை
   
2512. நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்,
ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர்
நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித்
தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.
6
உரை
   
2513. நடம் அது ஆடிய நாதன், நந்திதன் முழவு இடைக்
                                                      காட்டில்;
விடம் அமர்ந்து, ஒரு காலம், விரித்து அறம் உரைத்தவற்கு
                                                      ஊர் ஆம்
இடம் அதா மறை பயில்வார்; இருந்தவர், திருந்தி அம்
                                                      போதிக்
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய, காழி நன்நகரே.
7
உரை
   
2514. கார் கொள் மேனி அவ் அரக்கன் தன் கடுந் திறலினைக்
                                                         கருதி,
ஏர் கொள் மங்கையும் அஞ்ச, எழில் மலை எடுத்தவன்
                                                         நெரிய,
சீர் கொள் பாதத்து ஒர்விரலால் செறுத்த எம் சிவன் உறை
                                                         கோயில்
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண்வயல் காழி நன்
                                                         நகரே.
8
உரை
   
2515. மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால்,
பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும்
சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய,
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.
9
உரை
   
2516. புத்தர், பொய் மிகு சமணர், பொலி கழல் அடி இணை
                                                      காணும்
சித்தம் மற்று அவர்க்கு இலாமைத் திகழ்ந்த நல்
                                  செழுஞ்சுடர்க்கு ஊர் ஆம்
சித்தரோடு நல் அமரர், செறிந்த நல்மாமலர் கொண்டு,
"முத்தனே, அருள்!" என்று முறைமை செய் காழி நன்நகரே.
10
உரை
   
2517. ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு........... 11
உரை