தொடக்கம் |
2.100 திருக்கோவலூர்வீரட்டம் - திருவிராகம் - நட்டராகம்
|
|
|
2550. |
படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2551. |
கரவலாளர் தம் மனைக்கடைகள் தோறும் கால்
நிமிர்த்து
இரவல் ஆழி நெஞ்சமே! இனியது எய்த வேண்டின், நீ!
குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ் செய் கோவலூர்,
விரவி நாறு கொன்றையான், வீரட்டானம் சேர்துமே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2552. |
உள்ளத்தீரே! போதுமின்(ன்), உறுதி ஆவது
அறிதிரேல்!
அள்ளல் சேற்றில் கால் இட்டு, அங்கு அவலத்துள்
அழுந்தாதே,
கொள்ளப் பாடு கீதத்தான், குழகன், கோவலூர் தனுள்
வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2553. |
கனைகொள் இருமல், சூலைநோய், கம்பதாளி,
குன்மமும்,
இனைய பலவும், மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன்,
பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்,
வினையை வென்ற வேடத்தான், வீரட்டானம் சேர்துமே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2554. |
உளம் கொள் போகம் உய்த்திடார், உடம்பு
இழந்தபோதின்
கண்;
துளங்கி நின்று நாள்தொறும் துயரல், ஆழி நெஞ்சமே!
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விளங்கு கோவணத்தினான், வீரட்டானம் சேர்துமே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2555. |
கேடு மூப்புச்சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்,
ஆடு போல நரைகள் ஆய் யாக்கை போக்கு அது
அன்றியும்,
கூடி நின்று, பைம்பொழில் குழகன் கோவலூர்தனுள்
வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே. |
6 |
|
உரை
|
|
|
|
|
2556. |
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு
மூத்தபோதின்
கண்,
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்,
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த
கோவலூர்,
விரை கொள் சீர் வெண் நீற்றினான், வீரட்டானம் சேர்துமே. |
7
|
|
உரை
|
|
|
|
|
2557. |
ஏதம் மிக்க மூப்பினோடு, இருமல், ஈளை,
என்று இவை
ஊதல் ஆக்கை ஓம்புவீர்! உறுதி ஆவது அறிதிரேல்,
போதில் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர் தனுள்,
வேதம் ஓது நெறியினான், வீரட்டானம் சேர்துமே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2558. |
ஆறு பட்ட புன்சடை அழகன், ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான், குழகன், கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான், நீலகண்டன், இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான், வீரட்டானம் சேர்துமே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2559. |
குறிகொள், ஆழி நெஞ்சமே! கூறை துவர் இட்டார்களும்,
அறிவு இலாத அமணர், சொல் அவத்தம் ஆவது
அறிதிரேல்,
பொறி கொள் வண்டு பண்செயும் பூந் தண் கோவலூர்
தனில்,
வெறி கொள் கங்கை தாங்கினான், வீரட்டானம் சேர்துமே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2560. |
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே. |
11 |
|
உரை
|
|
|
|