தொடக்கம் |
2.101 திருஆரூர் திருவிராகம் - நட்டராகம்
|
|
|
2561. |
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து
உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே. |
1 |
|
உரை
|
|
|
|
|
2562. |
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி,
கொன்றை,
மத்தமும்,
இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர்
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை
போய்,
அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர்
என்பதே. |
2 |
|
உரை
|
|
|
|
|
2563. |
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர், காலன்
இன் உயிர்
மறுத்து மாணிதன் தன் ஆகம் வண்மை செய்த மைந்தன்,
ஊர்
வெறித்து மேதி ஓடி, மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி
அறுத்து மண்டி, ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே. |
3 |
|
உரை
|
|
|
|
|
2564. |
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில்,
குஞ்சி ஆர வந்தி செய்ய, "அஞ்சல்!" என்னி மன்னும் ஊர்
பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண்
இடை,
அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே. |
4 |
|
உரை
|
|
|
|
|
2565. |
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார்
மனத்து
அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர்
தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம்
அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர்
என்பதே. |
5 |
|
உரை
|
|
|
|
|
2566. |
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு,
அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர்
துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே. |
6
|
|
உரை
|
|
|
|
|
2567. |
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர்,
காமனை
மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர்
தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து,
மாவின்மேல்
அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே. |
7 |
|
உரை
|
|
|
|
|
2568. |
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்)
உரத்தொடும்
நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே. |
8 |
|
உரை
|
|
|
|
|
2569. |
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண்
பறந்து, மெய்
வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர்
செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங்
குரா,
அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே. |
9 |
|
உரை
|
|
|
|
|
2570. |
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார்
தவம்
வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன்,
மேவும் ஊர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே. |
10 |
|
உரை
|
|
|
|
|
2571. |
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன்
உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே. |
11 |
|
உரை
|
|
|
|